தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணியின் எம்.பிக்கள் பேச்சு

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(09) சந்தித்து பேச்சு நடத்தினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெயப்பட்டு சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், வினோநோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரதமரை சந்தித்தனர்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு கோரி இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோகணேசன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், வே. இராதாகிருஷ்னன், இரா.சாணக்கியன், ஜனா கருணாகரன், த.சித்தார்தன், தவராசா கலையரசன் உள்ளிட்டவர்களின் கையெழுத்து அடங்கிய கடிதமும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.