காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும்,
அக்கரைப்பற்று – பாலமுனை பகுதியில் நேற்றிரவு(09) இடம்பெற்ற சம்பவமொன்றில் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் உறவினர் ஒருவரே கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும். சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.





