சாதிய அடக்குமுறையினால் அபிவிருத்தியைத் தடுக்காதே! பிரதேச சபைக்கு எதிராக போராட்டம்

சாதிய அடக்குமுறையினாலும் அரசியல் பழிவாங்கல்களினாலும் எமது கிராமத்தின் அபிவிருத்தியைத் தடுக்காதே என வலி. கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக அச்செழுவைச் சேர்ந்த மக்கள் என அடையாளப்படுத்திய 28 பேர் அடங்கிய குழுவினர் இன்று(10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி.கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் தலைமை அலுவலகத்துக்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“மக்கள் அபிவிருத்திக்கு உலை வைக்காதே, வாக்களித்து பிரதேச சபைக்கு அனுப்பியது அபிவிருத்திக்காகவே, அபிவிருத்தியை தடுப்பதற்கு இல்லை” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

வலி.கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடிக்கல் நட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தமை குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.