போரால் உயிரிழந்தோரை நினைவுகூற பொதுத் தினம் – சஜித் அணி கோரிக்கை

போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கு பொதுவானதொரு தினம் அறிவிக்கப்பட வேண்டும் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று(10) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனங்களுக்கிடையே இருந்த முரண்பாடு காரணமாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

1883ஆம் ஆண்டில் தமிழ் மக்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதால் பிரதான தமிழ் வர்த்தகர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று தசாப்த கால போரால் நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

போர் முடிவடைந்த போதும் நாட்டில் இனப் பிரச்சினை தீரவில்லை. போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவது தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றில் விவாதங்கள் இடம்பெற்றது.

போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் உரிமை அனைத்து இனத்தவர்களுக்கும் இருக்க வேண்டும். போரால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூற பொதுவான நாள் ஒன்று பிரகடணப்படுத்த வேண்டும்.