கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆழமான நிலத்தடி நீர் மட்டத்தை கொண்ட வறண்ட நிலபகுதியை அடையாளம் காணுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று(10) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த ஆலோசனையை பிரதமர் வழங்கியுள்ளார். மேலும்,
மத அல்லது இன அடிப்படையில் சுகாதார பிரச்சினைகளின் முடிவை எடுக்க முடியாது. எனவே சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் கடந்த மாதம் 9ம் திகதி, ஜனாதிபதியும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கான வறண்ட நிலத்தை ஒதுக்கும் சாத்தியம் பற்றியும், ஏனைய நாடுகளை போன்று உடல்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். எனினும் அதொடர்பில் இதுவரை முடிவுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.





