நுவரெலியா – நாவலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகளிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியைத் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த மாணவியுடன் தொடர்பிலிருந்த நான்கு ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த வேறு நபர்களையும் கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.





