நாவற்குழியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாவற்குழியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பென் கடந்த புதன்கிழமை(09) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது குறித்த பெண் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று(11) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி தெற்கைச் சேர்ந்த விஜேந்திரன் கஜேந்தினி (வயது 19) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

(தென்மராட்சி நிருபர் தர்மிகன்)