கல்முனை ஆதார வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் உட்பட ஐவருக்கு கொரோனா

அம்பாறை – கல்முனை ஆதார வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மேலும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவருடன் தொடர்புகளைப் பேணிய 11 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி ரிபாஸ் தெரிவித்தார்.