இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி கிளாடியேட்டர்ஸ்

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று(12) இடம்பெற்றது. இப் போட்டியில் கொழும்பு கிங்ஸை வீழ்த்தி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி இறுதி போட்டிக்குள் முதலாவது அணியாக நுழைந்துள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் டானியல் பெல் ட்ரும்மொன்ட் 53 பந்துகளில் (70), இசுறு உதான (19) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் லக்சன் சந்தகன் (32/3), தனஞ்சய லக்சன் (27/2), நுவான் துசார (27/2) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய காலி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கினர். துடுப்பாட்டத்தில் பானுக ராஜபக்ச (33), தனஞ்சய லக்சன் (31) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அசான் பிரியஞ்சன் (42/2) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப் போட்டியின் நாயகனாக துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட தனஞ்சய லக்சன் தெரிவாகினார்.