யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் மற்றும் 32ஆவது நினைவு தினம் இன்று(11) மாலை 5 மணியளவில் நினைவுகூரப்பட்டது

யாழ்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ளதமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்திற்கு வெளியில் குறித்த நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

கட்சிக்குள் இருந்த முறுகல் நிலை காரணமாக கட்சி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த குறித்த நிகழ்வுகள் இடம்பெறாது அலுவலகத்திற்கு வெளியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
l





