மாகாண சபை தேர்தல் தொடர்பாக சு.க, பெரமுன இடையே இணக்கப்பாடில்லை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய பிரதிநிதிகளை புறக்கணித்து அரசாங்கம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியினுடைய உறுப்பினர்களை தனது திட்டங்களில் சேர்க்க அரசு தவறிவிட்டது என சு.கவின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடலுக்கான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்னும் பதிலளிக்கவில்லை.

சிறிலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனான கலந்துரையாடல்கள் எதுவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இது அரசாங்கத்திற்குள் ஒரு நெருக்கடிக்கு வழிவகுக்கும், என கூறினார்.