இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிருந்து இலங்கை அரசு விடுபட்டு செல்லாதிருக்கும் வகையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குரிய அவகாசம் வழங்கப்பட்டும் அதிலுள்ள பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தபடாத நிலையில் தற்போதைய அரசு தீர்மானத்தில் இருந்து விலகவுள்ளது என அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் நின்று செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





