தென்மராட்சிப் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த சிறுமி பொலிஸார் பொறுப்பேற்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த 15வயது சிறுமியின் தாயும் தந்தையும் வேறு திருமணங்களை மேற்கொண்டுள்ள நிலையில் தாத்தாவின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
குறித்த சிறுமி தனிமையில் இருக்கும் போது ஆண்கள் வந்து போவதை தொடர்சியாக அவதானித்த அயலவர்கள் சிறுவர் நன்நடத்தை பிரிவிற்கும், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
சம்ப இடத்திற்கு பொலிஸார் விரைந்து சிறுமி தனிமையில் இருந்த போது வீட்டில் இருந்த இருவரையும், அச் சமயம் வீட்டிற்கு பிரசன்னமாகியிருந்த இளைஞனும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





