ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா அரசியல் பிரிவின் தலைவர் கோட்டா, சம்பந்தனுடன் பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவரை செயலாளர் நாயகம் அன்டோனியா குட்டெரெஸ் இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

ஐநாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே 2021 ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் முக்கிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் 2021 பெப்ரவரியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஐநாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே அவருடைய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.