இராணுவ அதிநவீன சிறப்பு படைக்கு புதிய ஆடை அறிமுகம்

மதுருயாவில் உள்ள அதிநவீன சிறப்புப் படை பயிற்சிப் பள்ளி (எஸ்.எப்.டி.எஸ்) நேற்று(12) காலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது இராணுவ அதிநவீன சிறப்பு படைக்கான புதிய ஆடை அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் இராணுவ அணிவகுப்பும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறப்புப் படைகளின் படைப்பிரிவின் கர்னல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.