மன்னாரில் குளிக்கச்சென்ற கிராம உத்தியோகத்தர் நீரில் மூழ்கி காணாமற்போனார்

மன்னார் – நானாட்டான், அருவியாற்று பகுதியில் குளிக்கச்சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமற்போயுள்ளார்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரே காணாமற்போயுள்ளார். நேற்று நண்பகல் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போதே இவர் காணாமல் போய் உள்ளார்.

காணாமற்போன கிராம சேவையாளரை கடற்படையினரும் கிராம மக்களும் இணைந்து தேடி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.