4 மில்லியன் ரூபா மக்களுக்கு விநியோகம் ; நீங்களும் விண்ணப்பிக்கலாம் – ரஞ்சன் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது உத்த்தியோகபூர்வ யூடிப் சனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 மில்லியன் ரூபாவினை மக்களுக்கு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கு தினசரி கொடுப்பனவு மற்றும் மாதாந்த கொடுப்பனவு அவர் பெறாததால் அது கருவூல கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்ற பொதுச்செயலாளரின் வேண்டுகோளின் பேரில் சட்டமா அதிபர் துறையின் அனுமதியுடன் 4 மில்லியன் ரூபா தனக்கு வழங்கப்பட்டதாகவும், அதை தேவைப்படும் மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ரஞ்சன் எம்.பி கூறினார்.

பொருளாதார கஷ்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்கள் மற்றும் நாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பணம் தேவைப்படுபவர்கள் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது ஒருங்கிணைப்பு செயலாளர் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.