யாழ் மாவட்டத்தில் 3736 பேர் தனிமைப்படுத்தலில் – யாழ் அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் இன்றுவரை
160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில்
குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில்
யாழ் மாவட்டத்தில் இன்றைய நிலையில்
1305 குடும்பங்களை சேர்ந்த 3736 நபர்கள், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர், என்றார்.