உடுவிலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்! உடமைகள் சேதம்

உடுவில் அம்பலவாணர் பகுதியில் வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டில் இன்று(07) வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட வன்முறைக்குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல் குறித்த வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளை மாத்திரம் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போது, சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் அங்கு வருகை தரவில்லை என அயலவர்காளால் தெரிவிக்கப்பட்டது.