வடக்கிலும் எகிறும் கொரோனா தொற்று! 114 பேர் அடையாளம்

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று(20) 114 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 687 பேருக்கு நேற்று(20) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றினுடைய விபரம் வருமாறு,

யாழ் – 64 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 57 பேர்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா – 23 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

 

மன்னார் – 16 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 16 பேர்,

 

கிளிநொச்சி – 06 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசலையில் ஒருவர்,

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,

 

முல்லைத்தீவு – 02 பேர்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேர் ஆகியோருடன்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர்,

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் 114 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.