வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தவறான முடிவிற்கு முயற்சித்த கர்ப்பிணித் தாய் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் நேற்றைய தினம்(20) கிணற்றுக்குள் குதித்து தவறான முடிவிற்கு முயற்சித்துள்ளார். குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீட்ட உறவினர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.





