பொத்துஹெர – கல்டொம்புவ பகுதியில் ஆண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது்
தாக்குதலில் காயமடைந்த 42 வயதுடைய குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





