ஆப்கானிஸ்தானில் உள்ள 86 இலங்கையர்களில், இதுவரை 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 20 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும், எஞ்சிய 20 பேரும் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தலிபான்கள் நாட்டை பிடித்த போது, காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும், 3 பேர்இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





