ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றமையானது அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அலபாமா மாநிலத்தில் கல்மேன் எனுமிடத்தில் பேசிய டிரம்ப்,
தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது என ஜோ பைடன் எடுத்த முடிவே காரணம்.
ஜோ பைடன் நிர்வாகம் படைகளைத் திரும்பப் பெற்றது படைவிலக்கம் இல்லை, அது சரணடைந்ததற்குச் சமமாகும். நான் பதவியில் இருந்திருந்தால் தலிபான்களால் இவ்வளவு விரைவில் நாட்டை கைப்பற்றியிருக்க முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.





