தென்மராட்சியில் 26 பேருக்கு கொரோனா!

தென்மராட்சி – வரணி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று(23) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வரணியில் உள்ள கள் வடிசாலையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வரணி மத்தி, வரணி, மாசேரி, கறுக்காய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 79 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.