கொரோனாவால் யாழ் மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு – மணிவண்ணன்

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று தாக்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு 239 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்

யாழ் மாநகர சபையில் இன்று(24) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

இந்த வருமான இழப்பின் காரணமாக வழமையாக வருடாந்தம் யாழ் மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் வட்டார அபிவிருத்தி மற்றும் நகர்ப்புற பகுதி அபிவிருத்தி செயற்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.