கம்பஹா மாவட்டத்தில் 55 கிராமசேவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 81 கிராமசேவகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை கிராமசேவகர்கள் சங்கத்தின் கம்பஹா மாவட்ட தலைவர் காமினி ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 55 கிராமசேவகர்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளான கிராமசேவர்களுக்குப் பதிலாக வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்கள் தற்காலிகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





