கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியது

நாட்டில் நேற்றைய தினம்(25) கொரோனா தொற்றினால் 209 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8157ஆக அதிகரித்துள்ளது