ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பிரித்தானியர்களுக்கு பாதிப்பு எதுவும் எற்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று 3 தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்தில் தாக்குதல் நடந்தாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை பிரித்தானியா தொடர்ந்தும் முன்னெடுக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு உடனடி பதில் அளிப்பது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





