ஊரடங்கு கால நடைமுறைகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். மேலும்,

எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் எதிர்வரும் 6ம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும்.

மேலும், ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர், வழமை போன்றே தொழிலுக்கு செல்ல முடியும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.