கொழும்பில் சூப்பர் டெல்ட்டா பரவல்?

கொழும்பு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சூப்பர் டெல்ட்டா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் டெல்ட்டா சாதாரண டெல்ட்டா திரிபை விடவும் மிகவும் ஆபத்தானதும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ் உள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292 ஆக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.