ஆப்கானில் ISIS மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் ஆளில்லா விமானத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ISIS அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கார மாகாணத்திலுள்ள ISIS-K அமைப்பின் இலக்குகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்து, ISIS-K அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பபட்ட குண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உள்ளடங்களாக 170 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.