இலங்கையில் எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி – சுகாதார அமைச்சர்

நாட்டில் எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமானது சர்வதேச மட்டத்தில் பாராட்டப்பட்டுகளை பெற்றுள்ளது. எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.