ஆபாச வீடியோக்களை பகிர்தல், உடன் வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றம்

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான வீடியோக்களை வைத்திருத்தல், பகிர்தல் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை தோற்றுவித்துள்ள பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான வீடியோ தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீடியோ தொடர்பில் பொலிஸ் கணினி பிரிவு, ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த இணையத்தளத்திலிருந்து அதனை அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறான வீடியோக்களை வைத்திருத்தல், பகிர்தல் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் இலங்கை சட்டக் கோவையில் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)