நீர்வீழ்ச்சியில் அநாகரிக செயலில் ஈடுபட்ட தம்பதியினருக்கு பிணை! ஒருவருக்கு கொரோனா

பலாங்கொடை – பஹன்துடாவ பகுதியில் அநாகரிக செயலில் ஈடுபட்டு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ம் திகதி சந்தேகநபர்களை முன்னிலையாகுமாறு, இருவருக்கும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான இளைஞனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், யுவதி கொவிட் தொற்றாளருடன் பழகியுள்ளமையினால், இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)

 

பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் அநாகரிக செயலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது