யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் “கனலி” சஞ்சிகை வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய “கனலி இதழ் – 4” சஞ்சிகை இன்று(10) வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

காணொளி – https://fb.watch/mkESpJJdgl/?mibextid=cr9u03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் சி.பூங்குழலி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பதில் துணைவேந்தர் செ.கண்ணதாசன், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சஞ்சிகையை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் செ.கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் வாழ்த்துரையினை பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர் இயக்குநர் ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரும், கனலி சஞ்சிகை தொடர்பான ஆய்வுரையினை யாழ்ப்பாணக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஜோன்சன் ராஜ்குமாரும், சஞ்சிகை தொடர்பான மதிப்பீட்டு உரையினை சைவசித்தாந்தத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பழையமாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.