சர்வைவர் நிகழ்ச்சியில் முதலில் வெளியேற்றபடுபவர் இவர்தான்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ எனும் நிகழ்ச்சி தற்போது பிரபல்யமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்களை தேர்வு செய்து காட்டிற்குள் அனுப்பியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றுள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ரவுண்டில் யாரெல்லாம் எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்து ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

விஜயலட்சுமி, லட்சுமி பிரியா, இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். நிச்சயமாக இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என இரசிகர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

எனினும் இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் போட்டியில் இருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.