முல்லைத்தீவு மாவட்ட குருந்துமலைப் பிரதேசத்தில் விகாரைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலின்படி சட்டத்தரனி சுகாஷ் கணகரட்னம் முன்வைத்த விணணப்பம் ஆராய்வதற்காக நாளைவரை ஒத்திவுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு குருந்துமலைப் பகுதியில் இருந்த வைரவர் சூலம் சேதப்படுத்தி அகற்றப்பட்டு அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து குருந்துமலைப் பகுதி விகாரை தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஊர்மக்கள் சார்பில் சட்டத்தரனி சுகாஷினால் நீதிமன்றில் கோரப்பட்டது.
இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இவ் வழக்கில் எதிர்தரப்பினரான முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்களத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகாததால் வழக்கு நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் நாளை, முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்களத்தினர் ஆகியோரை நாளை ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.





