எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்திலுள்ள 639 பாடசாலைகளை திறக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
200 மாணவர்களுக்கம் குறைந்த ஆரம்ப பாடசாலைகளை திறக்கும் தேசிய ரீதியான நடவடிக்கைக்கு அமைய, இந்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வட மாகண கல்வி அமைச்சினுடைய செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள திறப்பதற்கான நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பக்கல்வி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வட மாகண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





