முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த அதிகாரத்தை கைவிட்ட ஒரேயோரு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனவும், அவ்வாறான ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்து மீண்டும் பலவீனமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





