எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் இன்று(19) அமைதியின்மை ஏற்பட்டது. மக்கள் பிரதான வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இரம்புக்கனை நகரில் ரயில் கடவையை மறித்து இன்று(19) காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு இன்று(19) மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதும், மக்கள் எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முற்பட்டதால், பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)









