ஜனாதிபதி ரணிலுடன் இணையும் ஐ.ம.சவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மக்களின் வாக்குப் பலம் கொண்ட மேலம் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பிரசார மேடையில் ஏறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.