
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச யாழில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாக கள ஆய்வினை மேற்கொண்டார். இதன் பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





