நிரூபமா ராஜபக்ஷ லண்டனில்! விசாரணைக்கு வராவிட்டால் இன்ரபோல் ஊடாக நடவடிக்கை?

பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் லண்டனில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு அவர் வராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீள அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 3 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்