இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





