நாட்டில் திரவப் பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது

நாட்டில் திரவப் பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.