இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் முக்கிய இரகசிய தகவல்களும் “பென்டோரா பேப்பர்ஸ்” ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
உலகிலுள்ள முக்கிய நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல்கள் இரகசிய ஆவணங்கள், நிதி தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் கசிந்துள்ளன.
இதில் முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளது.
“பென்டோரா பேப்பர்ஸ்” ஊடாக கணக்கில் காட்டாத செல்வம், வரி ஏய்ப்பு மற்றும் சில உலகின் பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட பணமோசடி போன்ற 12 மில்லியன் ஆவணங்களின் வெளிவந்துள்ளன.
ஆவணத்தை பார்வையிட – https://www.icij.org/investigations/pandora-papers/power-players/?player=nirupama-rajapaksa
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






