இந்திய வெளிவிவகார செயலாளர் பயணித்த ஹெலிகொப்டரில் திடீர் கோளாறு

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா பயணித்த ஹெலிகொப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நேற்று (03) பயணித்த MI-17 ரக ஹெலிகொப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஹெலிகொப்டர் திருகோணமலையில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதாகவும் இதையடுத்து, பிரமுகர்களின் பயன்பாட்டிற்கான Y-12 ரக விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விமானத்திலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)