இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலையா? இராணுவத் தளபதி எச்சரிக்கை!

நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் தொடர்ந்தும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை உருவாவதைத் தடுப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)