வடக்கிலும் எகிறும் கொரோனா தொற்று! நேற்றும் 153 பேர் அடையாளம்

யாழ்.மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம்(21) 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் பின்வருமாறு,

யாழ்.மாவட்டம் – 80 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 பேர்,

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரில் ஒருவர்,

 

கிளிநொச்சி – 28 பேர்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 17 பேர்,

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் – 18

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர்,

வவுனியா – 18 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

 

முல்லைத்தீவு – 09

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

 

வவுனியா விமானப்படை முகாமில் 03 பேர்,

முழங்காவில் கடற்படை முகாமில் 02 பேர்,

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர்

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம்(21) 153 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.